வரலாறு வாய்ப்புக்களையும் தரும்

Published By: J.G.Stephan

27 Jun, 2021 | 11:41 AM
image

சி.அ.யோதிலிங்கம்

வரலாறு வாய்ப்புக்களை இடைக்கிடை தந்துகொண்டிருக்கும். அதன் போது வாய்ப்புக்களை உரிய வகையில் பயன்படுத்த சம்பந்தப்பட்ட மக்கள் கூட்டம் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக அதன் அரசியல் தலைமை தயாராக இருக்க வேண்டும். வாய்ப்புக்களைப் பயன்படுத்தத் தெரியாத மக்கள் கூட்டம் தனது விடுதலைக்கு தகுதியற்ற மக்கள் கூட்டமாகும். அந்த மக்கள் வரலாறு முழுவதும் அடிமைகளாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். 

இலங்கைத்தீவை மையமாகக் கொண்ட புவிசார் அரசியல் போட்டி கொழும்புத்துறைமுக நகர் சட்டத்துடன் உச்ச நிலைக்கு சென்றுள்ளது. இந்தப் போட்டியை கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவிற்கு பின் என்பது போல துறைமுக நகர சட்டத்திற்கு முன், துறைமுக நகர சட்டத்திற்கு பின் எனவும் பிரிக்கலாம். அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம், இந்தியா என்பவை துறைமுக நகர சட்டத்துடன் இலங்கை சீனா பக்கம் முழுமையாக சாய்ந்து விட்டது என்றும் அதனால் இலங்கைத்தீவு சீனாவின் ஒரு காலணியாக மாறிவிட்டது என்று கருதுகின்றன.

இதனால் எதிர் நிலையை எடுக்க அவை தொடங்கி விட்டன. எதிர் நிலையை எடுப்பது என்றால் அவற்றிற்கு கிடைத்த கருவி தமிழர் விவகாரம் தான். எனவே அதனை உயர்த்திப் பிடிக்க முற்படுகின்றன. 

“அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், இந்தியாவும் தங்களுக்கு தேவையென்றால் தமிழர் விவகாரத்தை உயர்த்திப் பிடிப்பார்கள். தேவையில்லை என்றால் கீழே விடுவார்கள்” என்று  கஜேந்திரகுமார் ஒரு தடவை இக்கட்டுரையாளருக்கு கூறினார். 

ரணில் - மைத்திரி அரசாங்கம் அவற்றிற்கு தேவையாக இருந்தது. அதனால் தமிழர் விவகாரத்தை கிடப்பில் போட்டனர். தற்போது கோட்டாபய அரசாங்கம் மேற்குலக இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு உலை வைக்க முயற்சிக்கின்றது. அதனால் தமிழர் விவகாரத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர்.

இந்த உயர்த்திப் பிடித்தலின் வெளிப்பாடுகள் தான் அமெரிக்கா காங்கிரஸில் முன்வைக்கப்பட்டு பிரேரணையும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வாபஸ் பெறுவதற்கான கோரிக்கையும் உள்ளன. 

அமெரிக்கா காங்கிரஸில் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை அதில் ஒன்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தாயகம். அப்பிரதேசம் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றது எனக் கூறியுள்ளமையாகும். 

இரண்டாவது ஆயுத இயக்கங்கள் “சுதந்திரத்திற்கான அமைப்புக்கள்” என்று வெளிப்படுத்தியமையாகும். விடுதலைப்புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் எல்லாம் பயங்கரவாத இயக்கங்கள், தாம் நடாத்திய போர் பயங்கரவாத்திற்கு எதிரான போர் எனப் பிரச்சாரம் செய்து வரும் இலங்கை அரசிற்கு இது மிகப் பெரும் சாட்டையாடியாகும். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-27#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13