இவ்வருடம் மாத்திரமே விவசாயிகளுக்கு இரசாயன பசளை, அடுத்த போகம் சேதனப்பசளை இலவசமாக வழங்கப்படும் - மகிந்தானந்த அளுத்கமகே

Published By: Digital Desk 3

26 Jun, 2021 | 08:45 PM
image

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் அமைச்சர்கள் விஜயம் செய்து நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக அரசாங்கத்தின் நிர்ணைய விலைக்கு நெல் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தினை இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தனர்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அரசடிச்சேனை நெல் சந்தைப்படுத்தல் நிலையத்தில்  இவ்வருடத்தின் சிறுபோக விளைந்த உலர்த்திய நெல்லினை அரசாங்கத்தின் நிர்ணைய விலையான 56 ரூபாய் 50 சதத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு  இராஜாங்க அமைச்சர்  லொஹான் ரத்வத்த, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர், அமைச்சின் செயலாளர்கள் போன்றோர் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக நெல் கொள்வனலை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கருத்து தெரிவிக்கையில்,

இம்முறை மாத்திரம் விவசாயிகளுக்கு இரசாயனப்பசளை வழங்கப்படும், அடுத்த போகத்திற்கு சேதனப் பசளை வழங்கப்படும்  இதனை நாங்கள் இலவசமாகவே வழங்கப்போகின்றோம். ஆகையால் விவசாயிகள் எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் பெரும்பாலும் யூரியா பயன்படுத்தவில்லை, விவசாயிகள் அனைவரும் சேதனப் பசளையை பாவித்தே விவசாயத்தை மேற்கொண்டனர். 

விவசாயிகள் நலனுக்காகவே இந்த அரசாங்கம் இருக்கின்றது. கடந்த அரசாங்கத்தில் நெல்லின் விலை 30 ரூபா அளவில் போனது இப்போது 56 ரூபாவுக்கு எமது அரசாங்கம எடுக்கின்றது. ஆகவே விவசாயிகள் பயம் கொள்ளத்தேவையில்லை.

சிலர் கூறுவார்கள் இரசாயணம் இல்லாமல் பயில் செய்ய முடியாது என்று அது விவசாயிகளுக்கு தெரியும். இந்த இரசாயனங்களை போட்டுப் போட்டு  எவ்வளவே கேன்சர், கிட்னி நோய்களை உருவாக்குகின்றோம் ஆகையால் விவசாயிகளின் மக்களின் நன்மைகருதி இந்த அரசாங்கள் பயணிக்கும் என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02