“இராணுவத்தினரது நினைவுத்தூபியை அகற்றுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது” : ஜனாதிபதி

Published By: Robert

31 Aug, 2016 | 04:56 PM
image

குருநாகல் - தம்புள்ளை வீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக தற்காலிகமாக அகற்றப்பட்டிருக்கும் குருநாகல் நகருக்கு அண்மையில் இருந்த படையினரது நினைவுத்தூபியை ஏற்கனவே இருந்ததை விடவும் மிகச்சிறப்பான முறையில் மீண்டும் அந்த இடத்திலேயே மிக விரைவில் நிர்மாணிக்குமாறு தான் பாதுகாப்புச் செயலாளருக்கும் இராணுவத்தினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

இராணுவத்தினரது நினைவுத்தூபியை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக மேற்கொள்ளப்பட்டுவரும் போலிப்பிரசாரம் முற்றிலும் பொய்யானதாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, பிழையான தகவல்களை சமூகத்திற்கு வழங்கி சமூகத்தை பிழையாக வழிநடாத்துவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார். 

இன்று முற்பகல் குருநாகலை ஹிரியால மீகஹஎல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 'போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற நாடு” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இராணுவத்தினரது நினைவுத்தூபியை அகற்றுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தி நடவடிக்கைகளின் போதும், சில தேவைகள் ஏற்படுகின்றபோதும் உரிய கௌரவம் கிடைக்கும் வகையில் அவற்றை மீளவும் குறித்த இடங்களில் நிர்மாணிப்பதற்கு தாம் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் தொகுதி மட்டத்திலான முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக ஹிரியாலைத் தொகுதியில் இன்று இந்த நிகழ்ச்சித்;திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள குடும்பங்களை கிராம மட்டத்தில் அடையாளம் கண்டு அவர்களை அதிலிருந்து விடுவிப்;பதற்காக ஜனாதிபதி செயலணியின் முழுமையான பங்களிப்புடன் பல்வேறு விசேட செயற்திட்டங்கள் ஹிரியாலைத் தொகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டன. 

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, குறைந்த வருமானம்பெறும் மக்கள் அதிகளவில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருப்பது நாட்டின் வறுமைநிலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக உள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்நாட்டை வறுமையில்லாத ஆரோக்கியமான ஒரு சமூகம் வாழும் ஒரு நாடாகக் கட்டியெழுப்புவதற்கு போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து நாட்டை விரைவாக விடுவிப்பதற்கு எல்லோரும் ஒன்றுபடவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33