இந்தியாவைப் போன்று அபாயம் மிக்க நிலைமை இல்லை - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

Published By: Digital Desk 3

26 Jun, 2021 | 06:23 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்தியாவைப் போன்று அபாயம் மிக்க நிலைமை ஏற்படவில்லை. ஆனால் நாம் அபாயம் குறித்த கவனயீனமாக செயற்பட்டால் அவ்வாறான நிலைமை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இந்தியாவைப் போன்று அபாயம் மிக்க நிலைமை ஏற்படவில்லை. ஆனால் நாம் அபாயம் குறித்த கவனயீனமாக செயற்பட்டால் அவ்வாறான நிலைமை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

டெல்டா அல்லது வேறு எந்தவொரு வைரஸாகக் காணப்பட்டாலும் சகல தொற்றாளர்களின் மாதிரிகளிலும் மரபணு பரிசோதனையை முன்னெடுப்பது நடைமுறை சாத்தியமற்றதாகும்.

எனவே எதிர்காலத்தில் டெல்டா அல்லது வேறு நிலைமாறிய வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட மாட்டார்கள் என்று கூற முடியாது. வைரஸ் பரவலுக்கான இடமளிக்கப்பட்டால் மாத்திரமே அது தீவரமாகப் பரவும். அதற்கான இடமளிக்கப்படாவிட்டால் வைரஸ் பரவாது.

எவ்வாறிருப்பினும் இலங்கையில் தற்போது பாரிய எண்ணிக்கையில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமை ஏற்படவில்லை. எனவே தற்போதுள்ள நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு சகலரும் ஒத்துழைப்புடன் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதே முக்கியத்துவமுடையதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51