வீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள், கருங்குளவிகள்: அசௌகரியத்தில் மக்கள்..!

Published By: J.G.Stephan

26 Jun, 2021 | 03:29 PM
image

வீதியால் பயணிப்போரை கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன துரத்தி தாக்குவதாகவும், அதனால் குறித்த வீதியினால் தாம் செல்ல அச்சம் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி - தனங்களப்பு வீதியிலையே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது , 

குறித்த வீதியினை தென்மராட்சி தெற்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்களும், சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் - மன்னார் (ஏ -32) பிரதான வீதிக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். 

வீதி ஓரத்தில் காணப்படும் பனங்கூடல் மற்றும் எருக்கலை பற்றை காடுகளினுள் , கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன கூடு கட்டியுள்ளன. அவை வீதியில் செல்வோரை துரத்தி துரத்தி தாக்குகின்றன. அதனால் பலர் அச்சம் காரணமாக அந்த வீதியினை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். 

நேற்றைய தினம் கைக்குழந்தையுடன் , மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினரை காகங்கள் துரத்தி துரத்தி தாக்கியுள்ளன. அவர்கள் தலைக்கவசம் அணிந்திருமையால் பெரியளவிலான காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை குறித்த வீதியில் மாலை நேரங்களில் சிலர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் , தற்போது கருங்குளவிகள் , காகங்களின் தாக்குதல் அச்சம் காரணமாக அவர்கள் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08