தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தைப் பொறுப்பேற்க தயார்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Published By: J.G.Stephan

26 Jun, 2021 | 02:42 PM
image

(நா.தனுஜா)
ஜனாதிபதியுடன் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கொவிட் - 19 தடுப்பு செயலணிக்கூட்டத்தின் போது தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது தடுப்பூசி வழங்கல் நடைமுறையானது செயற்திறனற்றதாகக் காணப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆகையினால் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தைப் பொறுப்பேற்று உரியவாறு முன்னெடுத்துச்செல்வதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் கேசரிக்குத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதவது,

தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகளைப் பொறுப்பேற்று முன்னெடுத்துச்செல்வதற்குத் தீர்மானித்திருக்கும் நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து அதற்கான செயற்திட்டத்தைத் தயாரித்திருக்கின்றோம். அதன்படி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேசிய வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், மாவட்ட பொதுவைத்தியசாலைகள் மற்றும் ஆதார வைத்தியசாலைகயில் தடுப்பூசி வழங்கல் மையமொன்று தொழிற்படும். அவை வாரநாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் இயங்கும். அதனூடாகப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படும் 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு இந்தத் தடுப்பூசி வழங்கல் நடைமுறையின்போது முன்னுரிமை வழங்கப்படும்.

நாட்டில் ஏற்கனவே 600,000 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் அதேவேளை, எதிர்வரும் ஜுலை மாத ஆரம்பத்தில் 6 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும். எனவே அவற்றை செயற்திறனான முறையில் வழங்கவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை ஏற்கனவே தொழிற்பட்டுவரும்  சுகாதாரப்பணிமனையின் தடுப்பூசி மையங்கள் வழமைபோன்று தொழிற்படும். அவற்றுக்கு மேலதிகமாகவே எமது செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் நாளொன்றில் சுமார் ஒன்றரை இலட்சம் பேருக்குத் தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32