அசேல சம்பத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்னின்று செயற்படும்: சஜித்

Published By: J.G.Stephan

26 Jun, 2021 | 12:52 PM
image

(எம்.மனோசித்ரா)
குற்றவிசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்னின்று செயற்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு அசேல சம்பத் கைது செய்யப்பட்டதையடுத்து, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்து எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

சமூக மற்றும் சிவில் செயற்பாட்டாளரான அலேச சம்பத் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவே கூறுகின்றனர். அவரது உரிமைகளை பாதுகாப்பதற்கு நாம் முன்னிற்போம். அவருக்காக ஐக்கிய மக்கள் சக்தி இலவசமாக சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்.

சகல இலங்கை பிரஜைகளுக்கும் அவர்களது மனசாட்சிக்கு அமைவாக பேசுவதற்கு உரிமை உண்டு. அந்த உரிமையை அனுபவிப்பதற்கான சுந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக நாம் எப்போதும் உறுதியுடனிருப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02