கடற்றொழிலாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்பட்ட எச். டி. ரோஹித்த என்சலம் கொரோனாவால் மரணம்..!

Published By: J.G.Stephan

26 Jun, 2021 | 12:53 PM
image

கொவிட் தொற்றினால் உயிரிழந்த எச். டி. ரோஹித்த என்சலம் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் அனுதாபம் தெரிவிப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் பாடுபட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் கொழும்பு மாவட்டத்திற்கான பணிப்பாளர் எச். டி. ரோஹித்த என்சலம் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு கொத்தாலவல பாதுகாப்பு பல்லைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 24.06.2021 அன்று காலமானதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த காவத்த தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் கடந்த சில நாட்களாக எச்.டீ. ரோஹித்த என்சலம் ஈடுபட்டு வந்தார். அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கோ  நெருங்கிய உறவினர்களுக்கோ அல்லது நண்பர்கள் எவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டிராத நிலையில், கடற்றொழிலாளர்களுக்கு  நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்காக கடற்றொழிலாளர்களுடன் நெருங்கி செயற்பட்டு வந்த போதே அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், 1986ம் ஆண்டு கடற்றொழில் பரிசோதகராக சேவையில் இணைந்து கொண்ட ரோஹித்த 2008ம் ஆண்டில் உதவி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். திருமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் உதவி பணிப்பாளராக கடமையாற்றியுள்ள அவர் இறக்கும் போது கொழும்பு மாவட்டத்திற்கான உதவி பணிப்பாளராக கடமையாற்றினார். 59 வயதான அவர் எதிர்வரும் 2021.07.30ம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெறவிருந்தமையும் குறிப்பிடதக்கது.  

அன்னாரது மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவரின் அலப்பரிய சேவையை நினைவுகூர்நததுடன், அமைச்சின் ஊழியர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் சார்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை அன்னாரின் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53