அடங்குங்க இல்ல அடக்கமாகிடுவீங்க....

Published By: Gayathri

26 Jun, 2021 | 01:24 PM
image

கே. சுகுணா

நாட்டில் தொடர்ந்து ஊர­டங்கு  அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதிலும்  அது தளர்­வு­க­ளுடன் கூடிய ஊர­டங்­கா­கவே உள்­ளது.  நமது அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கு ஏற்ப ஊர­டங்கில் தளர்­வுகள் காணப்­ப­டு­கின்­றன. ஏனெனில் ஒரு மாத காலம்  வீட்டு உண­வுப்­பொ­ருட்­களை வாங்­காமல்  இருக்­க­மு­டி­யாது . தேவைக்­க­ளுக்கு ஏற்ப நாம் கடை­க­ளுக்கு செல்­லதான் வேண்டும். 

ஆனால், நாம் நமக்கு கிடைத்­துள்ள ஊர­டங்கு தளர்­வு­களை உதா­சீ­னப்­ப­டுத்­தக்­கூ­டாது. சிலர் தேவை­களின்றி  ஊர­டங்கு காலங்­களில் பய­ணங்­களை மேற்­கொள்­கின்­ற­தனை நாம் அவ­தா­னிக்க கூடி­ய­தாக உள்­ளது.

குறிப்­பாக பொருட்கள் வாங்­கு­வ­தாக கூறி அடி­கடி சிலர் நக­ரங்­களில் நட­மா­டு­கின்­றனர். ஒரே தட­வையில் கடைக்கு சென்று நமக்கு தேவை­யான பொருட்­களை வாங்கி வரு­வதே சாலச் சிறந்­தது. ஆனால், அதனை விடுத்து நினைக்­கின்ற போதெல்லாம் கடைத்­தெ­ருக்­க­ளுக்கு செல்­வது இக்­கா­ல­கட்­டத்தில் தவ­றான ஒரு நட­வ­டிக்­கையே. இரா­ணு­வத்­தினர் தெருவில் நட­மா­டினால் மட்­டுமே சிலர் வீட்­டுக்குள் அடைப்­பட்டு இருப்­ப­தனை காண­மு­டி­கின்­றது.

ஊர­டங்கு என்றால் என்ன என்­ப­தனை யுத்­த­கா­லப்­ப­கு­தியில் இலங்­கை­யர்கள் நன்­றா­கவே உணர்ந்­தனர். நாமும் உணர்ந்­தி­ருக்­கிறோம். ஆனால் 2000 த்தில் பிறந்து இன்று இளை­ஞர்­க­ளாக உள்­ள­வர்­க­ளுக்கு அது தெரிந்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் மிக குறைவே. அத­னால்தான் இளை­ஞர்கள் ஊர­டங்கு  காலத்தில் அதி­க­மாக வெளியே நட­மா­டு­வ­தனை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

முன்­பெல்லாம்  கொழும்பில் குண்டு வெடித்தால்   மொத்த மலை­ய­கமும் சத்தம் இன்றி வெறிச்­சோ­டி­யி­ருக்கும். ஆனால்  இன்று நம்­மோடு  ஒட்டி உற­வாடி உயிர் பறிக்க நினைக்கும்  கொரோனா நம் அருகில் உள்ள போதிலும் நாம் அச்சம் இன்றி  ஊர­டங்கு காலத்தில் நட­மா­டிக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

சிலர் இவ் ஊர­டங்கு காலத்தில் உற­வி­னர்கள் வீடு­க­ளுக்கு செல்­கின்­றனர். இதனை கண்­கூ­டா­கவே பார்க்க முடி­கின்­றது. மலை­யக பகு­தி­களில் இதனை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இங்கு  தற்­போது அதி­க­ளவில் பலர் முச்­சக்­கர வண்­டி­களை உட­மை­யாக வைத்­துள்­ளனர். அவர்கள் அடிக்­கடி தங்­க­ளது உற­வி­னர்கள் வீடு­க­ளுக்கு பய­ணங்­களை மேற்­கொள்­வ­தனை இல்லை என்று நாம் மறுக்க முடி­யாது. 

குறிப்­பாக  தோட்­டங்கள் பல நகர் புறங்­க­ளுக்கு  மிக அண்­மையில் உள்­ளன. உதா­ர­ணத்­துக்கு தல­வாக்­கலை  பிர­தே­சத்து தோட்­டங்­களை கூறலாம். இங்கு  தேயிலை தோட்­டங்­களை சிலர் வெளி­யாட்­க­ளுக்கு விற்­று­விட்­டனர்.  மக்கள் முன்பு கொழுந்து பறித்த  தேயிலை மலை­கா­டுகள் கொல­ணி­க­ளாக மாறி­விட்­டன.  தேயிலைத் தோட்­டங்­க­ளுக்கு வேலைக்கு போகாத வேற்று  மக்கள் அதா­வது தோட்­டத்­தொ­ழி­லா­ளிகள் இல்­லாத  வெளி­பி­ர­தே­சங்­களில் இருந்து  அதி­க­மா­ன­வர்கள்  குடி­யே­றிய பிர­தே­சங்­க­ளாக இவை  மாறி­விட்­டன. 

இப்­பி­ர­தே­சங்­களில் உள்­ள­வர்கள் மற்றும் நகரை அண்டி பிழைக்கும் மக்கள் பலர், அதா­வது  பஸ்­களில் வடை விற்­ப­வர்கள் தொட்டு வேறு பிர­தே­சங்­களில்   வர்த்­தக நிலை­யங்­களை நிர்­வ­கிப்­ப­வர்கள் வரை இங்கு உள்­ளனர். அவர்கள் குறுக்கு பாதை வழி­யாக லயங்­களை தாண்டி நக­ருக்குள் செல்­கின்­றனர்.

அந்த நேரத்தில் முகக்­க­வ­சங்­களும் அணி­வ­தில்லை. லயத்தை ஒட்­டிய உற­வி­னர்­களின் வீடு­க­ளுக்கு லயத்து வழி­யாக கூட்டம் கூட்­ட­மாக  குறிப்­பாக  பெண்கள் அந்தி வேலை­களில் நட­மா­டு­கின்­றனர். இவர்கள் கொரோனா அச்­சத்­துக்கு உட்­ப­டா­த­வர்­க­ளாக முகக்­க­வசம் இன்றி நடக்­கின்­றனர். இது பார்ப்­ப­வர்­களை அச்­சத்தில் ஆழ்த்­தி­னாலும். யாரும் எதுவும் சொல்­வ­தில்லை.

நாம் 119 க்கு அழைப்பு செய்தால் விசா­ரணை என்று நம்­மையும் அழைத்துச் செல்வர்... நாமும் பொலி­ஸுக்கு செல்ல வேண்டும் என்ற பயத்தில் மக்­களும் இதனை கண்­டுக்­கொள்­வ­தில்லை. ஆனால் இதனால் பாதிக்­கப்­படபோவது தோட்ட மக்­களே என்­ப­தனை நாம் மறந்­து­விடக்கூடாது.

ஏன் எனில் லயத்து வழி­யாக நடந்து செல்லும் ஒரு­வ­ருக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்­சத்தில் அது அங்கு விளை­யாடி கொண்­டி­ருக்கும் சிறார்­க­ளையும் அதிக பாதிப்­புக்கு உள்­ளாக்கும். அப்­ப­டியே அது வீட்டில் உள்­ள­வர்­களை தாக்கும். பின்னர் அது கொத்­த­ணி­யாக மாறி  மொத்த தோட்­டத்­தையும் பாதிக்கும் அபாயம் உள்­ளது.  இதே­போல இன்னும் சிலர் முக­க­வ­சங்­களை மூக்­கிற்கு அணி­வ­தற்கு பதி­லாக தாடைக்கு அணி­வதே அதி­க­மாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவற்­றை­யெல்லாம் நாம் தவிர்த்­திட வேண்டும்.

கொரோனா மிக பெரிய அழிவை உல­க­ளவில் ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­மையால் அதனை கண்டு அஞ்­சா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது.  முதலாம் அலை, இரண்டாம் அலை அடுத்த அலை தாக்கம் இன்னும் குறை­ய­வில்லை... அடுத்து மூன்­றா­வது அலை உரு­வா­கினால்  அதன் தாக்கம் எப்­படி இருக்கும் என்றும் எம்மால் கூற முடி­யாது.

கொரோனா நோய்த்­தொற்றின் அறி­கு­றிகள் நோய் ஏற்­பட்டு 2 தொடக்கம் 10 நாட்­க­ளிற்குள் தென்­படும். எனினும் உடலில் அறி­கு­றிகள் தென்­படும் முன் இவ் வைரஸ் ஆனது பாதிக்­கப்­பட்ட நப­ரி­ட­மி­ருந்து வெளிச்­சூ­ழ­லிற்கு பர­வி­விடும். எனவே இவ் வைரஸ் தொற்று பர­வாமல் தடுக்க பாது­காப்பு முறை­மை­களை அதற்கு முன்­னரே ஏற்­ப­டுத்­து­வது இன்­றி­ய­மை­யா­தது.

கொரொனா பாது­காப்பு போல நம் பக்­க­மி­ருந்தும் செய்­ய­வேண்­டிய விட­யங்கள் உள்­ளன. வீட்­டுக்­குள்­ளேயே இருப்­பதும், சுத்­தத்தைக் கடை­பி­டிப்­பதும் மிக மிக முக்­கி­ய­மா­னது. குறிப்­பாக, கொரோனா விடு­மு­றையால் விளை­யாட்டு உற்­சா­கத்தில் இருக்கும் குழந்­தைகள், மறந்­து­வி­டாமல் சுத்­தத்தைப் பின்­பற்ற, சில வழி­மு­றை­களை கையாள வைக்­கலாம்.

இந்­நோய்த்­தொற்­றி­லி­ருந்து எம்மை பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக வீட்­டி­லி­ருந்து வெளியே செல்­வதை இய­லு­மா­ன­வரை குறைத்து வீட்­டினுள் இருத்தல் வேண்டும். அதற்­கா­கதான் அரசு ஊர­டங்கை பிறப்­பித்­தி­ருக்­கின்­றது.

 கூடு­மா­ன­வரை நோய்த்­தொற்­றிற்கு ஆளாகும் குழுக்­களை அல்­லது நபர்­களை வீட்­டி­னுள்ளோ அல்­லது வேலைத்­த­ளத்­திலோ தொடர்­பு­கொள்­வதை குறைத்தல் நன்று. கைகளை சவர்க்­கா­ரத்­தி­னாலோ அல்­லது திரவ சவர்க்­கா­ரத்­தி­னாலோ அடிக்­கடி கழு­வ­வேண்டும். தேவை­யேற்­படும் போது தொற்­று­நீக்­கி­களை பாவித்து தொற்­றினை நீக்­கலாம்.

முறை­யான சுகா­தார செயற்­பா­டு­களின் முலம் நோய்ப்­ப­ரம்­பலை குறைக்­கலாம். காற்று உட்­செல்­லக்­கூ­டி­ய­வாறு அறை, கதவு மற்றும் யன்­னல்­களைத் திறந்து வைக்­கவும்.

தும்மும்போதும் இருமும்போதும் கைக்­குட்­டையால் அல்­லது திசுக்­க­ட­தா­சியால் வாய் மற்றும் மூக்குப் பகு­தியை மூட­வேண்டும். திசுக்கடதாசியெனில் பாவித்த உடன் குப்பையில் அகற்றவேண்டும்.

இரு நபர்களுக்கிடையில் பேசும்போது குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுங்கள். முகக்கவசம் அணிவதால் நோய்த்தொற்றைத் தவிர்க்கலாம். உங்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் தொற்றுநோய் நிபுணர் அல்லது சுகாதார உத்தியோகத்தரை நாடவும்.

 கொரோனா அறிகுறி இருப்பவர்கள் அல்லது  சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் இந்நோய்த்தொற்றைத் தவிர்க்க முகக்கவசத்தை அணியவும்.

குறிப்பாக முடியுமானவரை ஊரடங்கில் வீட்டினுள்ளேயே இருக்கப் பழகுங்கள். அது உங்களுக்கு மட்டும் அல்ல இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் நீங்கள் செய்யும்மிக பெரிய உதவியாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04