சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்க பசில் ராஜபக்ஷவால் முடியுமா ? நாம் முட்டாள்கள் இல்லை என்கிறார் ஹரினி அமரசூரிய

Published By: Gayathri

25 Jun, 2021 | 09:04 PM
image

(எம்.மனோசித்ரா)

பசில் ராஜபக்ஷ என்ற தனியொரு நபரால் நாட்டில் தற்போது காணப்படுகின்ற சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்க முடியுமா? நாட்டை நிர்வகிப்பதற்கு ராஜபக்ஷர்கள் மாத்திரமா உள்ளனர்? எம்மை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு அவ்வாறு தெரிவிக்கின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போது பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதால் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் என்று தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகள் தீரும் என்று கூறினர். அவரது ஆட்சிக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவைக் கூறினர்.

இவ்வாறு ராஜபக்ஷ குடும்பத்திலுள்ளவர்களையே வெளிக்கொண்டு வருகின்றனர். ஒருவர் தோல்வியடையும்போது மற்றைய ஒருவரை களத்தில் இறக்குகின்றனர். அவ்வாறெனில் நாட்டை நிர்வகிப்பதற்கு ராஜபக்ஷக்கள் மாத்திரமா உள்ளனர்?

பசில் ராஜபக்ஷ என்ற தனியொரு நபரால் நாட்டில் தற்போது காணப்படுகின்ற சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்க முடியுமா? பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக உள்ள அவர் நாட்டில் இருக்கும்போது இந்த பிரச்சினைகள் எவையும் காணப்படவில்லையா?

இது கொள்கை ரீதியான பிரச்சினையாகும். இவை அரசாங்கத்திலுள்ள சகலரதும் பொறுப்பாகும். எனவே ஒரு நபரின் வருகையால் இவை அனைத்தும் மாற்றமடையும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறெனில் அவர் அமெரிக்கா சென்றிருந்தபோதே ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம் அல்லவா?

பெசில் நாடு திரும்பியதன் பின்னர் எரிபொருள் விலை குறைவடையும் என்று கூறுபவர்கள் எம்மை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு அவ்வாறு தெரிவிக்கின்றனர். அமைச்சு பதவிகூட இல்லாத அவரால் எவ்வாறு அதனை செய்ய முடியும்? எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சரவையின் அனுமதியுடனேயே தீர்மானிக்கப்படும். அதற்கான முறையான படிமுறைகள் உள்ளன.

அவ்வாறெனில் அமைச்சரவை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அப்பால் பசில் ராஜபக்ஷவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? இது தர்க்க ரீதியான விடயமல்ல. அரசாங்கம் சிதைவடைந்துள்ளதால் மக்களை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான நிலைப்பாடுகளை தோற்றுவிக்கின்றனர்.

அவர் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டுமெனில் அந்த கட்சியில் பிறிதொரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். அதனடிப்படையில் அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியும் வழங்கப்படக்கூடும். ஆனால் நாட்டுக்கு தற்போது அவசியமாகவுள்ளது நபர்கள் அல்ல. சிறந்த வேலைத்திட்டமேயாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44