மோசடி குற்றச்சாட்டுக்கள்: பங்களாதேஷில் மூன்று திட்டங்களிலிருந்து சீனா விலகுகிறது

Published By: Digital Desk 3

25 Jun, 2021 | 10:16 AM
image

பங்களாதேஷில் மூன்று உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதில் இருந்து சீனா விலகியுள்ளது. திட்ட செலவுகளை அதிகரிக்கும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் வெளிவந்த நிலையிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கான இந்த திட்டமானது காசிப்பூர் - ஜாய்தேபூர் தொடக்கம் தலைநகர் டாக்கா அருகேயுள்ள பப்னா வரையில் கலப்பு பாதை இரட்டைக் ரயில்பாதையை அமைப்பதாகும்.

மேலும் மீட்டர் கேஜ் பாதையை அகவுரா பகுதியிலிருந்து சில்ஹெட் பகுதி வரையிலான மாற்று திட்டமும் செயல்படாது என சீன ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று திட்டங்களுமே இரு அரசுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாகும்.  மற்றுமொரு சர்ச்சையாக சீனாவே சீன ஒப்பந்தக்காரர்களைப் பயன்படுத்தியும் சர்வதேச விலைமனுகோரல் விதிமுறைகள் பின்பற்ற வில்லை என்றும் கூறப்படுகின்றது. அது மாத்திரமன்றி இந்த நிறுவனங்கள் பல்வேறு சாக்குப்போக்குகளில் திட்டத்தின் காலத்தை நீடிப்பதன் மூலம் செலவினங்கள் அதகரித்துள்ளதாக  டாக்கா செய்திகள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே மேற்கூறிய ரயில்வே திட்டங்களுக்கான செலவினங்களைக் குறைக்குமாறு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார். பங்களாதேஷ் ரயில்வே அமைச்சு  விசேட குழுவை அமைத்து செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தை முன்வைத்ததுள்ளது.

பத்மா பாலத்தின் இரு முனைகளிலும் ரயில் பாதைகள் அமைத்தல் மற்றும் சிட்டகாங் - கர்ணாவுலி ஆற்றின் அடிப்பகுதியில் தொட்டிகள் அமைத்தல் ஆகிய திட்டங்களையும்  சீனா முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்திலும் பெரும் செலவுகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22