அம்பாறை வதினாகல பகுதியில் நேற்று (30) இரவு வீசிய கடும் காற்றினால் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனர்த்தத்தினால் 70 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளதாக குறித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக முகாம்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.