கொவிட் 'இட்டுகம' நிதியத்திலிருந்தும் மக்களின் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது - விஜித்த ஹேரத் 

Published By: Digital Desk 4

23 Jun, 2021 | 08:57 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் 'இட்டுகம' நிதியத்திற்கு கிடைக்கப்பெற்ற பணத்தில் 23 வீதத்தை அம்பியூலன்ஸ் கொள்வனவுக்காக செலவழித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருக்கையில், சுகாதார அமைச்சர் இன்னும் அம்பியூலன்ஸ் கொள்வனவுக்கான ஆவணங்கள் கூட தயாரிக்கவில்லை என்று தெரிவிப்பதன் மூலம், இதிலும் மக்கள் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

200 வருடங்களாகியும் தோட்ட மக்களுக்கு வீடுமில்லை, அடக்கம் செய்ய மயானமுமில்லை  - விஜித்த ஹேரத் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் தேசிய பொருளாதாரம் தொடர்பான கதைகள் வெறும் வாய்ப் பேச்சு மட்டுமே. ஒரு துளி அரிசியையேனும் இறக்குமதி செய்யமாட்டோம் என்று கூறியவர்கள் இப்போது வெளிநாட்டில் இருந்து ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளனர்.

எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளனர். ஆனால் அதிகளவான வரிகளை அறவிடுகின்றனர். அந்த வரிகளை குறைத்திருந்தால் விலைகளை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை.

அத்துடன் எரிபொருள் விலையை அதிகரிக்க மாட்டோம். இதற்கான நிதியம் ஒன்று உள்ளது என்று கூறியவர்கள் இப்போது அவ்வாறான நிதியம் இல்லை என்று கூறுகின்றனர்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகின்றனர். ஆனால் ஐ.ஓ.சி  88 கோடி ரூபா லாபத்தை இதுவரையில் ஈட்டியுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் ஐந்தில் ஒன்றை மட்டுமே அவர்கள் வைத்துள்ளனர். மற்றையவற்றை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே வைத்துள்ளது. இப்படி இருக்கையில் எப்படி பெற்றோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்திற்குள் போனது.

அதேபோன்று கொவிட் நிதியத்தின் பணத்தில் இன்னும் அம்பியூலன்ஸ்களை கொண்டு வரவில்லை என்று சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். இராணுவம் அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் அண்மையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கொவிட் நிதியத்திற்கு கிடைத்த பணத்தில் 23 வீதத்தை அம்பியூலன்ஸ்களை கொண்டு வருவதற்காக செலவழித்துள்ளதாக கூறிப்பட்டுள்ளது. இதில் ஒரு அம்பியூலன்ஸின் பெறுமதி 194 இலட்சம் ரூபா என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையின்படி அம்பியூலனஸ்களை கொண்டு வர பணத்தை செலவழித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரோ இன்னும் அதற்கான ஆவணங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இது முழுமையாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். மக்கள் வழங்கிய பணமே அந்த நிதியத்தில் உள்ளது. இதிலும் கொள்ளையடிக்கின்றனர்.

மேலும் அரசாங்கம் தனது இயலாமை  மறைப்பதற்காக பலவந்தப்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றது. அத்தியாவசிய சேவைகள் என்று அறிவித்து பலவந்தமாக ஊழியர்களிடம் வேலை வாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.அதற்காக வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.. இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பாக நாங்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52