அஸ்ட்ராசெனிகா இரண்டாம் கட்டத் தடுப்பூசி வழங்குவது குறித்து சுகாதார அமைச்சர் சபையில் கூறியதென்ன..?

Published By: J.G.Stephan

23 Jun, 2021 | 04:38 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)


அஸ்ட்ராசெனிகா இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு வருகின்றோம். தடுப்பூசி கிடைக்காத பட்சத்தில் மாற்றீடாக பைசர் தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அத்துடன் திரிபு அடைந்துவரும் கொவிட் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலகளாவிய உயிரியல் பாதுகாப்பு வழிமுறையுடன் இணைந்து இலங்கை அரசாங்கமும் சுகாதாரத்துறையும் பணியாற்றி வருகின்றது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பி.சி.ஆர். பரிசோதனைகளின் ஊடாக கண்டறியப்படும் அனைத்து தொற்றாளர்களின் தரவுகளையும் அரசாங்கம் அறிக்கைப்படுத்தி வருகிறது. தொற்றாளர்களை விரைவாக இனங்காணும் வகையில் உரிய வேலைத்திட்டமொன்றையும் அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது. விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம்தான் நாம் தீர்மானங்களை எடுத்து செயல்பட்டு வருகிறோம். கண்டறியப்படும் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல், மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைத்தல், அவர்களுக்கான சிகிச்சையை வழங்கல், கண்டறியப்படும் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களை உரிய வகையில் கையாலல், வெளிநாட்டில் இருந்துவரும் கொவிட் தொற்றாளர்களை கையாலல் என இந்த செயற்பாடுகள் அனைத்தும்  ஒரு பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்படுகிறன.

கடந்த  20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்தி 17ஆயிரத்துக்கும் அதிகமான  கொவிட் தொற்றாளர்கள்  கண்டறிப்பட்டுள்ளதுடன்,  38  இலட்சத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் மாத்திரம் 712,515 பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாதத்தில் கடந்த 20ஆம் திகதிவரை 382,717 பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையின்  அடிப்படையில் பி.சி.ஆர்.பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறோம் என்பதுடன், இரசாயன பரிசோதனைகளை விரிவுப்படுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொவிட் தொற்று முதலில் கண்டறியப்பட்டிருந்த தருணத்தில் 3 பி.சி.ஆர். இயந்திரங்கள் மாத்திரமே எம்மிடம் இருந்தன. அவற்றில் 300 பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடிந்தது. ஆனால், தற்போது 30 இற்கும் அதிகமான இரசாயன பகுப்பாய்வகங்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. அரச வைத்தியசாலைகள் அனைத்திலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொது மக்களுக்கு தொற்று தொடர்பில் உண்மையான அனைத்து தகவல்களும் வழங்கப்படுகின்றன. ஏற்படும் மரணங்களுன் தரவுகளும் தினமும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.

அத்துடன் கொவிட் தொற்று ஓர் உலகளாவிய பெருந்தொற்றாகும். கொவிட் தொற்று தற்போது பல்வேறு திரிபுகளாக விரிவடைந்துள்ளது. புதிதாக கண்டறியப்படும் திரிபுகள் ஏனைய நாடுகளில் பரவாதிருக்க இராஜ்ஜியங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அவசியமாகவுள்ளன. பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய திரிபானது தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகைத்தந்துள்ளவர்கள்  மூலமே பிரித்தானியாவின்  திரிபு  இலங்கையில்  பரவியுள்ளமைக்கான சாதகத்தன்மைகள் உள்ளன. நாம் புதிய சுகாதார வழிகாட்டல்களை இதற்காக உருவாக்கியுள்ளோம். அதன் பிரகாரம்தான் செயற்படுகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43