சர்வதேச கிரிக்கட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி தக்கவைத்திருந்த சாதனையை இங்கிலாந்து அணி நேற்று (30) முறியடித்தது.

ஒருநாள் போட்டியில் அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக 444 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு  இலங்கை அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக 443 ஓட்டங்களை பெற்றிருந்தமையே கடந்த 10 வருடங்களில் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 169 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.