துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

Published By: Digital Desk 3

22 Jun, 2021 | 05:37 PM
image

(நா.தனுஜா)

எனது வீட்டிற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிலர் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில் தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபருக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட அல்லது அரசியல் ரீதியான தொடர்புகள் எவையுமில்லை. அதேவேளை இச்சம்பம் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு எனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

முதலில் எனது வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியான நபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாராளுமன்ற அமர்வு மற்றும் அமைச்சுடன் சம்பந்தப்பட்ட பணிகளுக்காக நான் நேற்று காலை 11.30 மணியளவில் எனது வீட்டிலிருந்து கொழும்பிற்குப் புறப்பட்டுவிட்டேன். பின்னர் மாலை 5.30 மணிளவில் தொலைபேசி அழைப்பின் மூலம், இவ்வாறு எனது வீட்டிற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் அதில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக படுகாயமடைந்த நபரை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லுமாறும் அவசியமான மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறும் அறிவுறுத்தினேன்.

அதேவேளை இதுகுறித்து விசாரித்துப்பார்த்தபோது,

எனது வீட்டின் முன்னால் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாதுகாவலருக்கும் மரணமடைந்த குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது துப்பாக்கிசூடு நடத்திய பாதுகாவலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருப்பதுடன் அவரிடமிருந்து வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. எனினும் அந்த வாக்குமூலத்தில் அவரால் என்ன கூறப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது.

சிலர் தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக இச்சம்பவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பரப்பிவருவதைக் காணமுடிகின்றது. அரசியல் ரீதியில் இந்தச் சம்பவத்தை என்னுடன் தொடர்புபடுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபருக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட முறையிலோ அல்லது அரசியல் ரீதியிலோ எவ்வித தொடர்பும் இல்லை. அவருடன் எனக்கு ஏதேனும் தனிப்பட்ட பகை இருந்தால், இவ்வாறு பட்டப்பகலில் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவரை எனது வீட்டிற்கு அழைத்து பழிதீர்ப்பேனா? ஆனால் இச்சம்பவம் தொடர்பில் சரியான தகவல்களை அறிந்துகொள்ளாத சிலரால் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். இதுகுறித்த விசாரணைகளுக்காக பொலிஸார் இதுவரையில் என்னை அழைக்கவில்லை. ஆனால் அழைக்கும்பட்சத்தில் சென்று வாக்குமூலம் வழங்குவேன். அதுமாத்திரமன்றி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44