“நான் பொலிஸ் என துப்பாக்கியை எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே வீழ்ந்தான் ” - நேரில்கண்டவர் பரபரப்பு தகவல்

22 Jun, 2021 | 04:03 PM
image

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் மட்டக்களப்பு ஊரணியை சேர்ந்த 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர்  உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து பிரதேச மக்கள் போராட்டங்களை மேற்கொண்ட நிலையில், இராஜாங்க அமைச்சரின் வீடு அமைந்துள்ள பகுதி பொலிஸாரின் பாதுகாப்புக்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற  நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் இன்று செவ்வாய்கிழமை காலை 11.00 மணியில் சென்று பார்வையிடப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், துப்பாகிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதி பரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழந்தவரின் நண்பனுமான விஜயராஜா தெரிவிக்கையில்,

நானும் நன்பணுமான பாலேந்திரனும் முச்சக்கரவண்டியில் வீதியால் சென்ற போது எங்களை கூப்பிட்டு வரவழைத்து நான் யார் என்று தெரியுமா நான் பொலிஸ் என துப்பாக்கியை எடுத்ததும் வெடிச்சது, எனது நண்பன் கீழேவிழுந்தான்.

நானும் பாலசுந்தரமும் நண்பர்கள் சம்பவதினமான நேற்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள மென்ரசா வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் கொடுப்பது தொடர்பாக முச்சக்கரவண்டியில் சென்று திரும்பிவரும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள மரம் ஒன்றில் குறித்த மெய்ப்பாதுகாவலர் இருந்துள்ளார். இதன்போது அவரை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு எனது நண்பன் கோரினார் நான் நிறுத்தாமல் சென்றேன்.

இருந்தபோதும் நண்பன் முச்சக்கரவண்டியை திருப்பி எடுங்கோ பொலிஸார் கூப்பிடுவதாகவும் கதைத்துவிட்டு போவோம் என்றார். அதனையடுத்து நான் முச்சக்கரவண்டியை திருப்பிக்கொண்டு அமைச்சரின் வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தியபோது  வீதிக்கு வந்த மெய்ப்பாதுகாவலர் நண்பனிடம் கேட்டார் என்னடா கைகாட்டிச் சென்றனீ என அதற்கு நண்பன் நீ யார் என்றார் அப்போது மெய்ப்பாதுகாவலர் இதை கேட்க நீயார் என இருவருக்கும் வாய்த்தர்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து மெய்ப்பாதுகாவலர் நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டுபோனபோதும் நான் யாரு என்று தெரியுமா பொலிஸ் என துப்பாகியை மெய்ப்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே வீந்துள்ளான் இரத்தம் வெளியேவந்தது அதன் பின்னர் எனது முச்சக்கரண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன்.

அதேவேளை மூன்று தினங்களுக்கு முன்னர் மெய்பாதுகாவருடன் நண்பனுக்கு பிரச்சினை நடந்திருக்கின்றது எனக்கு அதுபற்றி தெரியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58