அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய பவளப்பாறை குறித்து யுனெஸ்கோவின் பார்வை ! 

Published By: Digital Desk 3

22 Jun, 2021 | 05:27 PM
image

காலநிலை மாற்றத்தால் அழிந்து வரும் அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப் பாறையை ஆபத்தில் இருக்கும் உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையில், 'கிரேட் பாரியர் ரீஃப்' (Great Barrier Reef) என்ற ஒரு பவளப்பாறை கூட்டம் இருக்கிறது. இதன் நீளம் சுமார் 2,300 கிலோமீற்றர் ஆகும்.

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பு இதுதான். இந்த அமைப்பில் 600 வகையான பவளப்பறை வகைகள் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார அமைப்பு, உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பை அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இதன் மூலம்,  புவி வெப்பமடைதல் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்க அவுஸ்திரேலியா வலியுறுத்தப்படுகிறது.

1981 ஆம் ஆண்டில் உலக பாரம்பரிய தரவரிசையைப் பெற்ற பவளப் பாறையின் நிலை குறித்து யுனெஸ்கோவிற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. இது  2017 இல் ஆபத்து பட்டியலில் செல்கிறதா என யுனெஸ்கோவில் விவாதிக்கப்பட்டது.

புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் புவி வெப்பமடைதலின் விளைவாக கடல் வெப்பநிலை அதிகரிப்பது பாறைகள் கடுமையாக சேதமடைவதற்கு முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாறைகளில் பல நிறம் மாறி வெளுத்துப் போயுள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால்  பவளப் பாறையை பாதுகாக்க முயற்சிகள் எடுத்த போதிலும், பாறைகளில் நீர் தரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய இலக்குகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று யுனெஸ்கோ அறிக்கை கூறுகிறது.

பரிந்துரை பின்பற்றப்பட்டால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக இயற்கையான உலக பாரம்பரிய தளம் ஆபத்து பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47