பாராளுமன்ற அமர்வுகள் இன்று

Published By: Digital Desk 4

22 Jun, 2021 | 08:44 AM
image

பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை கூடவுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளை இன்றும் மற்றும் நாளையும் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய இன்றைய தினம் (22) இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்த) சட்டமூலம் மற்றும் காணி எடுத்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் ஆகியன விவாதத்துக்கு எடுத்தக்கொள்ளப்படவிருப்பதாக பராளுமன்ற செயலாளர் நாயகம் திரு.தம்மிக தஸநாயக தெரிவித்தார்.

இந்த விவாதம் மாலை 4.00 மணிவரை நடைபெற்று அது தொடர்பான வாக்கெடுப்பும் இடம்பெறும்.

இன்று காலை 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நாளை 23 ஆம் திகதி உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான 2 ஒழுங்குவிதிகளும், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொவிட்19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

அன்றையதினம் காலை 10.00 முதல் முற்பகல் 11.00 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 வரையான நேரம் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காவும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47