ஐக்கிய மக்கள் சக்திக்கும் எனக்குமிடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை: சம்பிக்க

Published By: J.G.Stephan

21 Jun, 2021 | 05:55 PM
image

(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்திக்கும் எனக்குமிடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. எமக்குள் எவ்வித அதிகார போராட்டமும் கிடையாது. இங்கு யாரும் சார்ள்ஸ் இளவசர் அல்ல. எலிசபத் மகாராணியாருக்கு பின்னர் நான் தான் அரச தலைவன் என்று சார்ள்ஸ் இளவரசருக்கு கூற முடியும். ஆனால் எம்மால் அவ்வாறு கூற முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய மக்கள் சக்திக்கும் எனக்குமிடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. சில ஊடகங்களே அவ்வாறான செய்திகளை பரப்பி விட்டிருக்கின்றன. நாம் பதவிகளுக்காகவும் அதிகாரத்திற்காகவும் அரசியலில் ஈடுபடுபவர்கள் இல்லை. நான் அரசியல் பின்புலத்துடன் அரசியலுக்கு வரவில்லை.

ஆனால் எமது அரசியல் பிரவேசத்தின் பின்னர் பல மாற்றங்களையும் செய்துள்ளோம். இதற்கு சிறந்த உதாரணம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தோல்வியடைச் செய்தமையாகும். எனவே எமக்குள்  எவ்வித  அதிகார போராட்டமும்  கிடையாது. இங்கு யாரும் சார்ள்ஸ் இளவசர் அல்ல. எலிசபத் மகாராணியாருக்கு பின்னர் நான் தான் அரச தலைவன் என்று சார்ள்ஸ் இளவரசருக்கு கூற முடியும். ஆனால் எம்மால் அவ்வாறு கூற முடியாது.

இலங்கையில் அரசியல் என்பது மக்களின் விருப்பம் ஆகும். மக்களின் ஆணைக்கு ஏற்ப கிடைக்கப்பெறுவதாகும். எவ்வாறிருப்பினும் தற்போது நாம் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கப் போவதில்லை. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எனது தலையீடு காணப்படாது. தற்போது அரசாங்கத்தை பொறுப்பேற்று நிர்வகிப்பதற்கு முடியாத மிகவும் நெருக்கடியான நிலைமை உருவாக்கியுள்ளார்கள்.

எனவே தற்போது நாட்டை மாற்றியமைப்பதற்கு சிறந்தவொரு பலம் மிக்க குழுவே தேவைப்படுகிறது. திடீரென அரசாங்கத்தை கவிழ்ப்பதால் அதனை செய்ய முடியாது. 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கத்தை அமைத்து பெற்றுக் கொண்ட பாடங்களால் சிறந்த அனுபவம் இருக்கிறது. எனவே மீண்டும் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க மாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30