மத்திய மாகாண உள்ளுராட்சி வருமான ஊக்குவிப்பு மாதமாக செப்டெம்பர் மாதத்தை பிரகடனப்படுத்தியுள்ளதாக மத்திய மாகாண உள்ளுராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண முதலமைச்சரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான மாகாண அமைச்சருமான சரத் ஏக்கநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய குறித்த வருமான ஊக்குவிப்பு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் புதிய வருமான வழிகளை இனம் காணுதல், உள்ளுராட்சி மன்றங்களுக்கு கிடைக்கக் கூடிய வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல், வியாபாரிகளையும் பொது மக்களையும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வரி செலுத்துவது தொடர்காக அறிவூட்டல் போன்ற பல்வேறு திட்டங்கள் இம் மாதத்தில் இடம்பெற உள்ளதாக மத்திய மாகாண உள்ளுராட்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.