இலங்கை  இந்திய பாலத்திற்கான அடித்தளம் மஹிந்த அரசாங்கத்தில் இடப்பட்டது

Published By: Ponmalar

30 Aug, 2016 | 08:45 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான பாலத்திற்கான அடித்தளம் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய அரசாங்கத்தால் இடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எட்வட் குணசேகர தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் இந்தியாவுடன் பாரியளவிலான  உடன்படிக்கை  செய்துகொள்ளவுள்ளதாக   எதிர்த்தரப்பினர்  தொடர்ந்தும்  கருத்து வெளியிட்டு வருகின்றனர். எதிர்த்தரப்பினர் அடிப்படையில்லாது அரசாங்கத்தின்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். 

கடந்த 2011 ஆம் ஆண்டு கால்பகுதியில் விமல் வீரவன்ச எம்.பி.யின் அமைச்சின் கீழுள்ள திணைக்களம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள யோசனையில் இலங்கை இந்திய தொடர்பிலான உறவுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் பிரகாரம் இலங்கையையும் இந்தியாவையும்    இணைக்கும் வீதி இ புகையிரத வீதி பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் ஆசியாவின் அதிவேக நெடுஞ்சாலை பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களாக முதலீட்டு சபையும்  நெடுஞ்சாலைகள் அமைச்சும் பொறுப்பாக்கப்படவுள்ளதாகவும் அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மீது வீண்பழியினை சுமத்தி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மத்தியில் இடைவெ ளியை ஏற்படுத்துவதற்கே எதிர்த்தரப்பினர் முயற்சிக்கின்றனர்.எனினும் அவர்களின் முயற்றி கைகூடப்போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27