ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தக்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - கரு ஜயசூரிய

Published By: Vishnu

21 Jun, 2021 | 01:21 PM
image

(நா.தனுஜா)

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும் சமூகநீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அதேவேளை நாட்டின் பொருளாதாரம் மிகமோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கடன்களை மீளச்செலுத்துவதற்காக வலுசக்தி அமைச்சு அதன் சொத்துக்களை பிணையாக வைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இறக்குமதிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எமது நாட்டின் ஏற்றுமதிப் பங்காளிகள் மிகவும் முக்கியமானவர்கள் என்பதை அரசாங்கம் மனதிலிருத்திச் செயற்படவேண்டும்.

தற்போது நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், மேற்குலகநாடுகளுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பதென்பது ஒருபோதும் பயன்தராது. 

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையைக் கணிப்பதில் காணப்படும் குறைபாடு தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்தின் ஊடாக, நாட்டின் கட்டமைப்பு ரீதியான தோல்வி வெளிப்பட்டுள்ளது. 

அவ்வாறிருக்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் தொற்றாளர்களுக்கு முறையான சிகிச்சைகளை வழங்குதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய கட்டமைப்புக்கள் சீராகத் தொழிற்படுகின்றன என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? தற்போதைய சூழ்நிலையில் காணப்படும் உண்மையான அச்சுறுத்தல் தொடர்பில் கொவிட் - 19 கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு தொடர்பான தேசிய செயலணி சரியாக மதிப்பீடு செய்திருக்கும் என்று நம்புகின்றோம். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தமது அடிப்படைக் கடமை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17