பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்குமாறு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளது.

டீசலின் உற்பத்தி வரி பத்து ரூபாவால் அதிகரித்துள்ள காரணத்தால் குறித்த விலையேற்றத்திற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக ஐ.ஓ.சியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஷாம் டி பெரேரா தெரிவித்துள்ளார்.

டீசல் வரி அதிகரிப்பு தாக்கத்தினால் பெற்றோல் சார்ந்த உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கூடும் என்ற அடிப்படையில் பெற்றோலின் விலையையும் அதிகரிக்க கோரியதாக அவர் சுட்டிக்காட்டினார்.