ஈரானின் ஜனாதிபதித் தேர்தல்  “மேற்குலக பிரசார கற்பிதங்களின் யதார்த்தம்”

21 Jun, 2021 | 12:03 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

அல்-ஜஸீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடலை கடந்தவாரம் பார்க்கக் கிடைத்தது. இதில் ரூடவ்ரானின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பேசப்பட்டது. 

ஈரானிய அரசியல் ஆய்வாளர்கள் இருவருடன் அமெரிக்காவின் நிபுணர் ஒருவர் பங்கேற்றார். வெள்ளிக்கிழமை நடைபெறுவதற்கு இருந்த ஜனாதிபதித் தேர்தல் பற்றி மூவரும் கருத்து சொன்னார்கள். 

எதிர்கால அமெரிக்க ஈரானிய உறவுகள் எவ்வாறு இருக்குமென அமெரிக்க நிபுணரிடம் கேட்கப்படுகிறது. ஒரு வேட்பாளரின் பெயரை சுட்டிக்காட்டி, அந்தக் கொலையாளியுடன் பேசுமா என்பது நிச்சயமில்லையென்றாலும், அமெரிக்கா ஈரானுடன் பேசும் என்கிறார். 

அமெரிக்க நிபுணர் கொலையாளி என்று குறிப்பிட்டவர் வேறு யாரும் அல்லர். இன்றைய தேர்தலில் வெற்றி பெறக்கூடுமென பரவலாக நம்பப்படும் வேட்பாளரே.  இது நிபுணரின் கருத்து மாத்திரமல்ல. இன்னமும் ஈரானை பயங்கரவாத தேசமாகவும் ஈரானின் ஆட்சி நிர்வாக முறையை இடியப்ப சிக்கலாகவும், அந்நாட்டின் தேர்தலை கண்துடைப்பாகவும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவோரை கொலையாளிகளாகவும் சித்தரிக்க முனையும் மேற்குலக பொதுப்புத்தியின் பிரதிபலிப்பே. 

இந்தப் பொதுப் புத்தியின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக திட்டமிட்ட ரீதியிலான பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விடும் ஊடகங்கள் என்ற நிறந்தீட்டப்பட்ட சாளரத்தின் ஊடாக, ஈரானிய ஜனாதிபதித் தேர்தலை அவதானிக்கும் நிர்ப்பந்தம் எமது சாபக்கேடு எனலாம். 

மேலைத்தேய ஊடகங்களின் விஷமப் பிரசாரங்களைப் பட்டியல் இடலாம். தேர்தலில் யாரெல்லாம் போட்டியிட வேண்டும் என்பதை ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு தீர்மானிக்கிறது. இதன் காரணமாக ஈரானிய மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளார்கள் என்பது முதல் பிரசாரம். விக்கிபீடியாவைப் பாருங்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் என்று பட்டியல் இடப்படுவோரின் எண்ணிக்கை முதன்மைப்படுத்திக் காட்டப்படும். 

அடுத்த பிரசாரம் வேட்பாளர்கள் பற்றியது. ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பின் மூலம் கடும்போக்குவாதிகளுக்கு கூடுதல் வாய்ப்பளிக்கப்படுகிறது. கடும்போக்குவாதியொருவரின் வெற்றிக்காக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை ஆன்மீகத் தலைவருக்குத் தேவையான விதத்தில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றெல்லாம் குற்றம் சுமத்தப்படும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49