பங்காளி கட்சிகளை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சிகள் - தயாசிறி ஜயசேகர

Published By: Digital Desk 3

21 Jun, 2021 | 10:08 AM
image

(எம்.மனோசித்ரா)

பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளித்த ஏனைய கட்சிகளை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கான சூழ்ச்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதேநிலைமையை எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஏற்படக் கூடும் என்று அதன் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்தோடு எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக அன்றி , முழு அரசாங்கத்திற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்தது அமைச்சர் உதய கம்மன்பில அல்ல. நிதி அமைச்சினாலேயே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே நிதி அமைச்சருக்கு எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.

எரிபொருள் விலை அதிகரிப்பதை ஒரு நபர் மீது மாத்திரம் சுமத்துவது பொறுத்தமற்றது. எனவே நம்பிக்கையில்லா பிரேரணை முழு அரசாங்கத்திற்கு எதிராகவும் கொண்டு வரப்பட வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவரும் எதிர்கட்சியும் இவ்விடயம் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவரவில்லை. இதனை அனைவரும் அறிவார்கள்.

தற்போது அரசாங்கத்திற்குள் பாரிய சதியொன்று முன்னெடுக்கப்படுகிறது. தேர்தலின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட பங்காளி கட்சிகளை அரசாங்கத்திலிருந்து அகற்றுவதற்கான சூழ்ச்சிகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

அரசாங்கத்திற்கு வலு சேர்த்த கட்சிகளின் தலைவர்களை அரசாங்கத்திலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் வெளியேற்றுவதற்கான இந்த செயற்பாடுகள் தொடருமாயின் எதிர்காலத்தில் இதே நிலைமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஏற்படக் கூடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04