போக்குவரத்து சபை, புகையிரத திணைக்களம் முடக்கப்பட்டதால் சுமார் 68 கோடி ரூபா நட்டம்..!

Published By: J.G.Stephan

20 Jun, 2021 | 02:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)


கொவிட-19  வைரஸ் தாக்கத்தை  கருத்திற் கொண்டு  நாடு தழுவிய  ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நாளை தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. ஒரு  மாத காலத்திற்கு பின்னர் பொது போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த ஒரு மாத காலமாக பொது போக்குவரத்து சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டதால்  இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களத்திற்கு சுமார் 68 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் தடை செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து  இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுமாறு அனைத்து தரப்பினருக்கு  அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.  பொது மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். தேவையற்ற பயணங்களை இயலுமான அளவிற்கு தவிர்த்துக் கொள்ள வேண்டும் என  போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது.



 புகையிரத போக்குவரத்து சேவை.
கொவிட் தாக்கத்தின் காரணாக  இடை நிறுத்தப்பட்டிருந்த  புகையிரத சேவை நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.  மாகாணங்களுக்கு இடையிலான  புகையிரத போக்குவரத்து சேவை மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் நிறுத்தப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக மேல்மாகாணத்திற்குள் மாத்திரம் புகையிரத சேவையினை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய நாளை காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையில் 34  பயண போக்குவரத்து சேவைகள் ஈடுப்படுத்தப்படும். பிரதான  புகையிரத வழி பாதையில் 06 புகையிரத  பயணமும், கரையோர புகையிரத பாதையில் 4 புகையிரத பயணமும், களனி வழி புகையிரத பாதையில் 4 புகையிரத பயணமும், புத்தளம் வழி புகையிர பாதையில் 3 புகையிரத பயணமும் சேவையில் ஈடுப்படும்.

 இதற்கு மேலதிகமாக  கண்டி,  அநுராதபுரம் , மஹவ மற்றும் பொல்காவலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு புகையிரத பயணங்கள் அளவில் சேவையில் ஈடுப்படும். அத்தியாவசிய சேவையில் ஈடுப்பட அனுமதி பெற்றுள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும்  சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பொது பயணிகள் அனைவரும் கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும். புகையிரத பெட்டிகள் மற்றும் புகையித  நிலையங்கள்  கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன. புகையிரத நிலையங்களில் கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட  சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியான  முன்னெடுக்கப்படும்.

 புகையிரத போக்குவரத்து சேவை கடந்த ஒரு மாத காலமாக முடக்கப்பட்டதால்  புகையிரத திணைக்களத்திற்கு  45 கோடி நட்டம்  ஏற்பட்டுள்ளதாக  புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  பயணத்தடை மீண்டும் அமுல்படுத்தப்படும் வேளையில்  பொதுபோக்குவரத்து சேவைகளை  நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 பேருந்து போக்குவரத்து சேவை.
மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட  அளவில்  பேருந்து போக்குவரத்து நாளை சேவையில் ஈடுப்படுத்தப்படும். ஒரு வலயத்திற்கு எத்தனை பேருந்துகளை  சேவையில் ஈடுப்படுத்த வேண்டும் என்பதை  அவ்வலய டிபோ தீர்மானிக்கும்.  மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்துகளை சேவையில் ஈடுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

  ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே பேருந்து சேவை ஈடுப்பட வேண்டும். பேருந்தில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை  முழுமையாக செயற்படுத்தும் பொறுப்பு பேருந்தின் சாரதி மற்றும், நடத்துனருக்கு  உண்டு. சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

மாகாணங்களுக்கு இடையிலான அத்தியாவசிய பேருந்து போக்குவரத்து சேவை தற்போதும் அமுலில் உள்ளது. நாடு தழுவிய ரீதியில் சுமார் 1000 பேருந்துகள் அத்தியாவசிய சேவையில் ஈடுப்படுகிறது. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டுள்ளமை இந்த அத்தியாவசிய சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

பொது போக்குவரத்து பேருந்து சேவை கடந்த ஒரு மாத காலமாக முடக்கப்பட்டதால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார்  23 கோடி நிதி நட்டம் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பேருந்து கட்டணம் எக்காரணிகளுக்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது.  தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04