52 கிலோ ஹெரோயினுடன் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் கைது

Published By: Digital Desk 2

19 Jun, 2021 | 06:50 PM
image

செ.தேன்மொழி

தெற்கு பகுதியில் மூன்று வாரகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கையின் போது 52 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் , களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பொலிஸ் தலைமையகத்தின் , திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மூன்று வாரகாலம், விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காலி , ஹிக்கடுவை, ஹாங்கம மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , இதன்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுள் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து 52 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர்கள் போதைப் பொருள் கடத்தலுக்காக பயன்படுத்திய இரு வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் , சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் , அவர்களை விஷ போதைப் பொருட்கள் மற்றும் அபாயகர ஒளடத கட்டளைச் சட்டவிதிகளுக்கு கீழ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி , ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தவும் எதிர்பார்த்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58