வட்டவளை வெலிஓயா தோட்டத்தில் தனிமைப்படுத்தில் சட்டத்தை மீறிய 12 பேர் கைது

Published By: Digital Desk 2

19 Jun, 2021 | 02:31 PM
image

தனிமைப்படுத்தில் சட்டத்தை மீறி ஹட்டன் -  வட்டவளை வெலிஓயா தோட்டத்தில் ஒன்று கூடிய குற்றச்சாட்டில் 12 தோட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த தோட்டத்தில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் கடந்த 15ம் திகதி அந்த தோட்டம் தனிமைப்படுத்தல் நிலைமையிலிருந்து விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இதன்போது தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் சிலரை தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்திற்குள் வைத்து பூட்டி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆகவே இதற்கு எதிராக தோட்ட நிர்வாகம் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அனுமதியின்றி காரியாலயத்திற்குள் பிரவேசித்தமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை, ஊழியர்களை சிறை வைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் இன்றைய தினம் ஹட்டன்  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46