ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்  : சாரா குறித்து  இந்தியா எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை - சரத் வீரசேகர

19 Jun, 2021 | 06:22 AM
image

 (இராஜதுரை ஹஷான்)

 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்  சம்பவத்துடன் தொடர்புடைய  42 பேருக்கு எதிராக எதிர்வரும் மாதம் வழக்கு தாக்கல்  செய்யப்படும்.குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. முறையான விசாரணைகளுக்கு அமைய  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  சாரா  உயிருடன்  இருப்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.  

அவர்  இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளதாக  கிடைக்கப் பெற்ற  தகவல் விசாரணை நடவடிக்கைகளை திசைத்திருப்பும் வகையில் அமைந்துள்ளது.  

சாரா தொடரபில் இந்திய புலனாய்வு பிரிவினர் எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை என  பொது  மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊ;டகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்க்ண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது.கொலை , கொள்ளை மற்றும்  கற்பழிப்பு , போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம், பாதாள குழு செயற்;பாடுகள் ஆகியவற்றை முழுமையாக இல்லாதொழித்து பொது மக்கள்  அச்சமில்லாம்ல் வாழும் சூழலை ஏற்படுத்துவது  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பிரதான  இலக்காகும்.

 பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில்  நாடு தழுவிய ரீதியில் உள்ள 14022 கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக  பாதுகாப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

பொது மக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையிலான உறவு மற்றும், தொடர்பு சிறந்த முறையில் பேணப்பட வேண்டும் என்பதற்காக  சமுதாய பொலிஸ் இராஜாங்க அமைச்சு அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது.  பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

 பொது  மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்  செயற்பாட்டில் பொலிஸாரின் பங்களிப்பு அவசியமாக உள்ளது. .ஒரு சில பொலிஸார்  முறையற்ற வகையில் செயற்படுவதால் முழு பொலிஸ் சேவை தொட்பில் தவறான நிலைப்பாடு தோற்றம் பெறுகிறது.   

வீதிகளில் சேவையில் ஈடுப்படும் பொலிஸாரின் மனநிலையினை பொது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். பொலிஸ் சேவையில் பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றிற்கு தீர்வு காண தற்போது உரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்  பெயரில் நாளாந்தம் பலர் கைது செய்யப்படுகிறார்கள். விசாரணை நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.  

இதுவரையில் சுமார் 800 பேர் வரை கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் பலர்  தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடையவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை காலதாமதப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது. சிறந்த விசாரணைகளுக்கு அமைய அனைத்து ஆதாரங்களையும் திரட்டியே சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும்.  

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்க்பட்ட விசாரணை யின் அறிக்கை கடந்த வருடம் நவம்பர் மாதம்  சட்டமாதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கப் பெறாத காரணத்தினால் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என முன்னாள் சட்டமாதிபர் குறிப்பிட்டார்.

 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த ஜனவரி மாதமளவில் கிடைக்கப் பெற்றது. ஆகவே குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  பெரும்பாலும் 42 பேருக்கு எதிராக  எதிர்வரும் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்படும். குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.

 பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்பவரின் புதல்வர்கள் தற்கொலை குண்டுதாரிகளாக   இரண்டு பிரதான இடங்களில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளார்கள்.

இப்ராஹிம் என்பரின் நிறுவனத்திற்கு முன்னாள் அமைச்சர் ரிசர் பதியுதீன் அமைச்சு தொடர்புப்பட்டுள்ளது.     

அத்துடன் பயங்கரவாதி சஹ்ரானுக்கு 300 இலட்சம் நிதி வழங்கியதும் இதனுடன் தொடர்புப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான பின்னணியின் அடிப்படையில் அவர் கைது செய்யப்ட்டு  தடுப்பு காவலில் உள்ளார்.

குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  சாரா உயிருடன் இருப்பதற்கான  ஆதாரங்கள் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. 

இவர் இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்ட தகவல்  இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை திசைத்திருப்பும் நோக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றே கருதப்படுகிறது. இவர் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினர் எவ்வித தகவல்களையும் இதுவரையில் வழங்கவில்லை. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08