வட மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய அரச உத்தியோகத்தர்கள் 2 கோடியே 38 இலட்சம் ரூபா கொரோனாவுக்காக அன்பளிப்பு

Published By: Digital Desk 4

18 Jun, 2021 | 08:24 PM
image

வடக்கு மாகாணத்தில் பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்கள் கொரோனாவுக்காக வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கையினை ஏற்று 2 கோடியே 38 இலட்சம் ரூபா நிதியினை  அன்பளிப்புச் செய்துள்ளனனர் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 10.06.2021 அன்று கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக  ஆளுநர் அலுவலகத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 17.06.2021 நேற்று வழங்கிய தகவலில் மேற்படி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிதியில் 30 இலட்சம் ரூபா தேசிய கொவிட் 19 நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் மிகுதி 2 கோடியே 8 இலட்சம் ரூபா பிரதி பிரதம செயலாளர் ( நிதி) அலுவலக வங்கி கணக்கில்  வைப்பில் உள்ளது என்றும்  குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சின் செயலாளர்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருமானம் இழந்து வாழ்வாதாரம் குன்றி நலிவடைந்து வாழ்விடங்களும் இன்றி இருக்கின்ற குடும்பங்களுக்கு  ஒரு பயனாளிக்கு 9 இலட்சம் ரூபா படி 20 பயனாளிக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கும் அவ்வாறே ஒரு பயனாளிக்கு 140000.00 ரூபா படி 20 பயனாளிகளுக்கு மலசல கூடங்கள் அமைப்பதற்கும் வழங்கப்பட்டு வருகிறது என அந்த  தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04