ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேர்தல் அமைப்பாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க யடிநுவர தொகுதியின் தேர்தல் அமைப்பாளராகவும், பிரதியமைச்சர் அனுராத ஜயரத்ன உடதும்பர தொகுதியின் தேர்தல் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் ஜனாதிபதி மைத்திரிபால நியமித்துள்ளார்.