கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தாமதிப்பது ஏன் ? : மன்னார் நகர முதல்வர் கேள்வி

Published By: Digital Desk 2

18 Jun, 2021 | 04:36 PM
image

மன்னாரில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற பலர் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்ற  நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலையினை தற்காலிகமாக மூடி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் தாமதிப்பது ஏன்? என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (18) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் சில ஆடைத்தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் அண்மைக்காலமாக மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் உள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலையினை தற்காலிகமாக மூடி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் தாமதிப்பது ஏன்? என்று தெரியவில்லை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை காரணமாக அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் அன்றாட கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் எவ்வித தொழிலும் இன்றி உள்ள நிலையில், ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்றவர்கள் கடமைக்குச் செல்ல முடியும் என்றால் பயணத்தடையின் அர்த்தம் என்ன? என்பது தெரியவில்லை.

எனவே மன்னார் மாவட்டத்தில் குறைவடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது.

மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் பலர் தற்போது கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே 'வரும் முன் காப்போம்' என்பதை கருத்தில் கொண்டு மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள  பாரிய அபாயத்தை தடுக்க அரச உயர் அதிகாரிகள்,மற்றும் உரிய சுகாதார துறையினர் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47