போர் நிறுத்தத்தின் பின் காசா பகுதியில் இஸ்ரேலின் இரண்டாவது தாக்குதல்

Published By: Vishnu

18 Jun, 2021 | 09:52 AM
image

இந்த வாரம் இரண்டாவது தடவையாகவும் இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் அமைந்துள்ள ஹமாஸ் தளங்களை குறிவைத்து தாக்கியுள்ளது.

கடந்த மாதத்தின் 11 நாள் யுத்தம் முடிவடைந்த பின்னர், இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியில் முன்னெடுக்கும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் இது அண்மையது ஆகும்.

இஸ்ரேலிய ஏவுகணைகள் வியாழக்கிழமை காசா நகரத்தின் வடமேற்கிலும், பீட் லஹியாவின் வடக்கிலும் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் ஹமாஸ் ஆயுதக் குழுக்களுக்கு சொந்தமான பல தளங்களைத் தாக்கியதாக பாலஸ்தீனிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தாக்குதலினால் எதுவித உயிரிழப்புகளும் பதிவுசெய்யப்படவில்லை.

இஸ்ரேலில் காசா பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட தீக்குளிக்கும் பலூன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக முற்றுகையிடப்பட்ட இடத்திலுள்ள ஹமாஸ் படையினர், தெற்கு இஸ்ரேலுக்கு தீக்குளிக்கும் பலூன்களை அனுப்பியமைக்கு பதிலளிக்கும் விதமாக புதன்கிழமை அதிகாலை இஸ்ரேலிய விமானப் படை காசா பகுதியில் தாக்கிதல்களை நடத்தியிருந்தது.

ஹமாஸ் என்பது காசா பகுதியை இயக்கும் ஒரு போராளிக்குழு மற்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதப்படுகிறது.

காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பயங்கரவாத குழுங்களுக்கு இடையே கடந்த மே 21 அன்று முன்னெடுக்கப்பட்ட எகிப்திய தரகு யுத்த நிறுத்தம் 11 நாள் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்தது.

அந்த தாக்குதலில் 66 குழந்தைகள் உட்பட 256 பாலஸ்தீனியர்களை உயிரிழந்ததுடன், 12 இஸ்ரேலியர்களும் ஹமாசின் ரொக்கெட் தாக்குதல்களினால் பலியானார்கள்.

இந்த போர்நிறுத்தத்தின் பின்னர் அரங்கேறிய இரண்டாவது தாக்குதலாக அண்மைய சம்பவம் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17