சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

17 Jun, 2021 | 07:17 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

காஸ் விலை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவுக்கும் காஸ் நிறுவனங்களுக்குமிடையில் இன்று இடம்பெற இருந்த பேச்சுவார்த்தை தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டதாக அமைச்சரவை உபகுழு அங்கத்தவரான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

காஸ் நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப் காஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் காஸ்விலை உயர்ந்துள்ளதை அடிப்படையாக்கொண்டே விலை அதிகரிக்க அனுமதி கோரி வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கை தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட  அமைச்சரவை உபகுழு ஆராய்ந்து பார்த்து, காஸ் நிறுவன பிரதானிகளுடன் கடந்த இரண்டு தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது.

நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையில் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுள்ளதால், விலை அதிகரிப்பை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. அதற்கு மாற்று ஏற்பாடுகள் இருக்குமாக இருந்தால், அதுதொடர்பில் சமர்ப்பிக்குமாறு எமது குழு தெரிவித்திருந்தது.

அதன் பிரகாரம் இதுதொடர்பாக இன்று கலந்துரையாடி தீர்மானம் ஒன்றுக்கு வர இருந்தபோதும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றைய தினம் பேச்சுவார்த்தை  இடம்பெறவில்லை.

அதனால் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக காஸ் நிறுவனங்கள் மற்றும் அமைச்சரவை உபகுழுவுக்கிடையிலான பேச்சுவார்த்தையை எதிர்வரும் திங்கட்கிழமைவரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் திங்கட்கிழமை இடம்பெறும் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடொன்றுக்கு வர முயற்சிப்போம். இருந்தபோதும் தற்போதைக்கு காஸ் விலை அதிகரிக்கப்படாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22