அக்கறையற்ற அரசியல்வாதிகள் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு உதவி – சாணக்கியன் காட்டம்

Published By: Gayathri

17 Jun, 2021 | 04:58 PM
image

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் மறந்து செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர், கித்துள் பிரதேச சபை உறுப்பினர்களான வர்ணன், சிவானந்தன் மற்றும் ஊர்மக்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த பகுதி மக்களினால் மணல் லொறிகள் இந்த வீதி ஊடாக பயணிப்பதை நிறுத்துமாறு கோரி மனு ஒன்றும் இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் பயணத்தடை காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கித்துள் பகுதியில் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்து கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் 30 மீனவர்கள் விவசாயிகள் குறித்த ஆற்றுப்பகுதியில் சமூக இடைவெளியைப் பேணி தமது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த ஆற்றை ஊடறுத்து இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தாம் தொழிலுக்கு ஆற்றைக் கடந்துச் செல்ல பெரிதும் சிரமப்படுவதாகவும் ஆற்றுப்பகுதி ஆழமாகி செல்வதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள் தாம் செல்லும் வீதியும் நாசமாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் தாங்கள் மண் அகழ்வில் ஈடுபடுவோரிடம் ஏதும் கேட்டால் அவர்கள் தங்களை தாக்குவதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், கடந்த மூன்று வருடங்களாக இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் குறிப்பிட்டிருந்தனர். இந்தநிலையிலேயே இரா.சாணக்கியன் குறித்த பகுதிக்கு சென்று மக்களுடன் பேசியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50