70 புதிய உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஐ.தே.க வில் பதவிப்பிரமாணம்

Published By: Digital Desk 3

17 Jun, 2021 | 04:33 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 70 உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள புதிய உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் புறக்கோட்டையிலுள்ள கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் குறித்த 70 புதிய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் வகித்துக் கொண்டு , ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 69 உள்ளூராட்சி உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிராகிக்கப்பட்டது.

அதனையடுத்தே குறித்த புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27