'எனது பலத்தை உலகிற்கு காண்பிக்க உதவிய சாகர காரியவசத்திற்கு புண்ணியம் கிடைக்க வேண்டும்': உதய கம்மன்பில

Published By: J.G.Stephan

17 Jun, 2021 | 10:01 AM
image

(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து  எனது பலத்தை உலகிற்கு காண்பிக்க உதவி புரிந்த பொதுஜன பெதுமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு புண்ணியம் கிடைக்கப் பெறவேண்டும். எதிர்தரப்பினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக் கொள்ள முடியும். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையினால் பொதுச்செயலாளர் சாகர காரியவசமே நெருக்கடிக்குள்ளாகுவார் என  வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

 எதிர் கட்சியினரால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 எரிபொருள் விலையினை அதிகரிக்கும் அதிகாரம் வலுசக்தி அமைச்சுக்கு மாத்திரம் கிடையாது. எரிபொருள் விலையினை அதிகரிக்கும் தீர்மானம் வாழ்க்கை செலவு தொடர்பிலான உபகுழுவின் ஆலோசனைக்கு அமைய எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் முக்கிய பல அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கு கொள்கிறார்கள்.

 எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து, அமைச்சரவை தீர்மானத்தை எதிர்த்து கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவிற்கு  பதில் வழங்கியதுடன் . மூன்று விடயங்கள் தொடர்பில் நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்தேன்.  நான் முன்வைத்த சவால் குறித்து இதுவரையில் எவ்வித பதிலும் அவர் தரப்பில் இருந்து கிடைக்கப் பெறவில்லை.

 எரிபொருள் விலை அதிகரிப்பு தீர்மானத்தை நான் தனித்து எடுக்கவில்லை. என்பதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் முக்கிய பல அமைச்சர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இதன் ஊடாக எனது பலம் வெளிப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு புண்ணியம் கிடைக்க வேண்டும்.

எதிர் தரப்பினர் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு  வர தீர்மானித்துள்ளார்கள். இதனையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ள முடியும். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையினால் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமே நெருக்கடிக்குள்ளாகுவார் என்பதை தெளிவாக குறிப்பிட முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37