இரண்டாம் கட்டத்தடுப்பூசி பெற தாமதித்தால், தடுப்பூசியால் எதிர்பார்த்த பலனைப் பெறமுடியாது: அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்

Published By: J.G.Stephan

16 Jun, 2021 | 05:00 PM
image

(நா.தனுஜா)
கொவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதலாம் கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டத்தடுப்பூசியை வழங்கவேண்டிய காலக்கெடு இம்மாத இறுதியுடன் பூர்த்தியடைகின்றது. அதன் பின்னர் இரண்டாம் கட்டத்தடுப்பூசி வழங்குவதனால் எதிர்பார்த்த பலனைப் பெறமுடியாது. எனவே சர்வதேச நாடுகளுடன் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை  நடத்தி  அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் முதலாம் கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட சுமார் 6 இலட்சம்பேர் இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறார்கள். எனினும் அவர்களுக்கு வழங்குவதற்கு அவசியமான அஸ்ராசெனேகா தடுப்பூசிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் மாற்றுத்தீர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், முதலாம் கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக சுகாதாரசேவைகள்  பணிப்பாளர்நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமாத்திரமன்றி இது குறித்து ஆராயுமாறு தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவின் சிரேஷ்டி வைத்திய அதிகாரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறு அஸ்ராசெனேகா தடுப்பூசியை முதலாம் கட்டமாகப் பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதன் சாத்தியப்பாடு தொடர்பில் வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கத்திடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முதலாம் கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு இயலுமானவரையில் இரண்டாம் கட்டமாகவும் அதே தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதே சிறந்தது என்றும், அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த வாரம் சுகாதார அமைச்சிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தோம் என்று தெரிவித்த அவர், அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் வசம் அஸ்ராசெனேகா தடுப்பூசிகளின் கையிருப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த நாடுகளுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் ஊடாக இயலுமானவரையில் இரண்டாம் கட்டத்தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியமான அஸ்ராசெனேகா தடுப்பூசிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வைத்திநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

அஸ்ராசெனேகா தடுப்பூசியை முதலாம் கட்டமாகப் பெற்றவர்களுக்கு 12 - 14 வாரங்களுக்குள் இரண்டாம் கட்டத்தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். எனவே அந்தக் காலஅவகாசம் இம்மாதத்துடன் பூர்த்தியடைகின்றது. அதன்பின்னர் இரண்டாம் கட்டத்தடுப்பூசியை வழங்குவதன் விளைவாக எதிர்பார்த்த பிரதிபலனைப் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே பேச்சுவார்த்தைகளின் ஊடாக அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெறுவதில் தாமதமேற்படும் பட்சத்தில், உரிய ஆய்வுகளின் பிரகாரமும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படியும் இரண்டாம் கட்டமாக பிறிதொரு தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும். எனினும் அதற்கு அரசாங்கமும் உரிய அதிகாரிகளுமே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.  

கேள்வி :நாடளாவிய ரீதியில்  விதிக்கப்பட்டுள்ள அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் எதிர்பார்த்த பிரதிபலனைக் கொடுத்திருக்கிறதா?

பதில் :இல்லை. அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகளின் மூலம் எதிர்பார்த்த முன்னேற்றம் அடையப்படவில்லை. கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி புத்தாண்டுக் கொத்தணி ஆரம்பமானது. எனினும் மே மாதம் 21 ஆம் திகதியிலிருந்தே பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பயணக்கப்பட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் கண்டறியப்படும் தொற்றாளர்களின் வீதம் 15.6 சதவீதமாகக் காணப்பட்டது. எனினும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் பின்னர் அந்த வீதம் 14.9 சதவீதமாக அமைந்துள்ளது. ஆகவே இது 0.7 வீதம் மாத்திரமே குறைவடைந்திருக்கிறது. நாட்டைத் தொடர்ந்தும் முடக்கிவைத்திருக்க முடியாது என்றபோதிலும்,  தற்போதைய நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பான எமது தீர்மானத்தை இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அறிவிப்போம் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41