காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்வதே அரசாங்கத்தின் திட்டம்..!

Published By: J.G.Stephan

16 Jun, 2021 | 04:25 PM
image

(நா.தனுஜா)
வலிந்து காணாமலாக்கப்பட்ட  உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களை முடக்குவதற்கும் நீர்த்துப்போகச்செய்வதற்குமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டத் தலைவி மதியசுரேஷ் ஈஸ்வரியிடம் வினவியபோது அவர் கூறியதாவது:

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்காக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தோம். எனினும் தற்போது தடையுத்தரவு பிறப்பித்தல், கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளின் ஊடாக அந்தப் போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுமாத்திரமன்றி சிலவேளைகளில் போராட்டங்களில் ஈடுபடவேண்டாமென்று பகிரங்கமாகக்கூறாவிட்டாலும், போராட்டத்தில் ஈடுபடும் சாதாரண  மக்களை  உளவியல் ரீதியில் அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. போராட்டத்தில் ஈடுபடுகின்ற எங்களை கைது செய்து சிறையில் அடைத்தால், காணாமல்போனோருக்கான நீதியைப்பெறும் போராட்டம் முழுமையாக இல்லாமல்போய்விடும் என்பதனாலேயே தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் எமக்கான நீதியைப் பெற்றுத்தரமுடியவில்லை. அவ்வாறிருக்கையில் முன்னாள் பொலிஸ்மா அதிபரொருவரால் எவ்வாறு எமக்கான நீதி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யமுடியும? அவர் எமக்கு சார்பாக செயற்படுவார் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? ஆகவே  சர்வதேச  விசாரணையின்  ஊடாக மாத்திரமே இதற்கான தீர்வைப்பெற்றுக்கொள்ளமுடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13