ஷானி அபேசேகர மீதான அனைத்து விசாரணைகளையும் நீதிமன்றம் முடிவிற்குக்கொண்டு வரும் - சர்வதேச மன்னிப்புச்சபை நம்பிக்கை

Published By: Digital Desk 4

16 Jun, 2021 | 05:24 PM
image

(நா.தனுஜா)

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை இலக்குவைப்பதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது என்ற நம்பிக்கை ஷானி அபேசேகர மற்றும் சுகத் மென்டிஸ் ஆகியோரின் விடுதலை மூலம் ஏற்பட்டிருக்கிறது.

குற்றமிழைத்தமையை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாதவிடத்து, ஷானி அபேசேகர மீதான அனைத்து விசாரணைகளையும் நீதிமன்றம் முடிவிற்குக்கொண்டுவரும் என்று நம்புவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டியது இலங்கை  அரசாங்கத்தின் கடப்பாடு: சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari.lk

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுகத் மென்டிஸிற்கும் பிணை வழங்குவதற்கான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம் மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

அதேவேளை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளை இலக்குவைப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளிக்காது என்ற நம்பிக்கையையும் இந்தத் தீர்மானம் அளித்திருக்கிறது.

ஷானி அபேசேகர குற்றமிழைத்தமையை நிரூபிக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளத்தக்க சான்றுகள் முன்வைக்கப்படாத பட்சத்தில், அவர்மீதான அனைத்து விசாரணைகளையும் நீதிமன்றம் முடிவிற்குக்கொண்டுவரும் என்று நம்புகின்றோம்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் ஷானி அபேசேகர மற்றும் சுகத் மென்டிஸ் ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகினர். இதன்போது ஆரம்பத்தில் அவர்களுக்கு வழங்குவதற்கு மறுக்கப்பட்ட வைத்தியசாலை சிகிச்சை உள்ளடங்கலாக முறையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்தியிருந்தோம்.

போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளடங்கலாக முக்கிய வழக்கு விசாரணைகளில் ஈடுபட்டமைக்காக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள, இடமாற்றம் செய்யப்பட்டுள்ள, கைதுசெய்யப்பட்டுள்ள, பதவிநீக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பில் நாம் கவலையடைகின்றோம். இவர்களில் பலர் இனிமேலும் பொறுப்புக்கூறலைக் கோரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உண்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதும் புறக்கணிப்பிற்குள்ளாகியுள்ளது என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38