தனிமைப்படுத்தல் விதிகளை மீறி தனியார் வகுப்பு : 31 பேருக்கு கொரோனா தொற்று

Published By: Gayathri

16 Jun, 2021 | 03:24 PM
image

கட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடத்தப்பட்டு வந்த தனியார் வகுப்பில் இருந்த 58 பேரில் 31 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது. 

 கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து கட்டுகஸ்தோட்டை, ரனவன வீதியில் தங்குமிடத்துடன் நடத்தப்பட்ட தனியார் வகுப்பொன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். 

அங்கு 52 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர். க.பொ.த. உயர்தர வகுப்பில் சித்தியடையாத மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு பெற்றோரின் அனுமதியுடன் தங்கவைக்கப்பட்டு வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன.

அதில் ஒரு மாணவனுக்கு சுகயீனம் ஏற்பட்டதன் விளைவாக அவர் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டபோது கொவிட் தொற்று உறுதியானது.

இதனையடுத்து பொலிசாரும் சுகாதார அதிகாரிகளும் இணைந்து மேற்படி இடத்தை முற்றுகையிட்டனர். இதன்போது அங்கு 52 மாணவர்கள் தங்கி கல்வி கற்ற விடயம் தெரியவந்தது. 

52 மாணவர்களும் 6 ஆசிரியர்களுமாக 58 பேரும் அவ்விடத்திலே தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்களில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27