இலவசமாக சட்ட உதவிகளை வழங்க ஐ.தே.க.வினால் இரண்டு சட்டத்தரணிகள் நியமிப்பு..!

Published By: J.G.Stephan

16 Jun, 2021 | 10:10 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்ட காரணத்தால் யாராவது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சட்டத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக சட்ட உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதற்காக இரண்டு சட்டத்தரணிகளையும் நியமித்திருக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை அரசாங்கம் பொலிஸாரைக்கொண்டு கைது செய்துவரும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் மக்களை பயமுறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றது. சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பவர்களை, உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டதென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்து, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொண்டுவந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தார்மிக மற்றும் சட்டவிரோத செயலாகும்.

நாட்டின் அரசியலமைப்பில் நாட்டு மக்களுக்கு கருத்துச்சுதந்திர உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த உரிமையை மீறும் நடவடிக்கையாகவே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை காண்கின்றோம். கருத்துச்சுதந்திரத்தை இல்லாமலாக்கி மக்களை அடக்கி வருகின்றனர். அரசாங்கத்துக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிக்க முடியாத நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் அரசாங்கத்தின் இந்த ஊடக அடக்குமுறைக்கு ஆளாகுபவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பித்திருக்கின்றது. அதனால் யாராவது சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டால் அவர்களுக்கு சட்ட உதவிகளை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அத்துடன் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் செயற்படுவதற்காக யசஸ்டி சில்வா மற்றும் நவீன் சானக்க ஆகிய  சட்டத்தரணிகளை நியமித்திருக்கின்றோம். அதனால் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் யாராவது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டால், அவர்கள் 077 9215299 அல்லது 071 4497217 என்ற இலக்கங்களுடன் தொடர்ப்புகொண்டு எமது சட்டத்தரணிகளிடமிருந்து இலவசமாக சட்ட உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47