ஷானி அபேசேகரவின் பிணை கோரிக்கை தொடர்பான தீர்ப்பு இன்று

Published By: Vishnu

16 Jun, 2021 | 08:15 AM
image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பிணை கோரிக்கை தொடர்பான மனு மீதான தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேற்கண்ட இருவரும் தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு, நேற்று மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷ்சங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே அது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் குறித்து பேலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் பிணை கோரி, கம்பஹா நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் முன்னர் நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38