தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 1,411 பேர் கைது

Published By: Vishnu

16 Jun, 2021 | 08:00 AM
image

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 1,411 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில் அதிகளவான கைதுகள் இடம்பெற்றுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும்.

நேற்றைய கைதுகளில் பெரும்பாலானவை குளியாபிட்டியில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி அங்கு 158 பேரும், மத்தளையில் 146 பேரும், கண்டியில் 127 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தமாக 35,360 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கண்காணிப்பு நடவடிக்கையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக நால்வர் சிலாபம் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் இருந்து ட்ரோன் காண்காணிப்பு நடவடிக்கையில் 131 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53