மாகாணவைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகாரப் பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் செயல் - சித்தார்த்தன்

Published By: Gayathri

16 Jun, 2021 | 06:21 AM
image

மாகாண நிர்வாகங்களுக்குட்பட்ட ஒன்பது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதென எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு அதிகாரப் பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயல் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்  தெரிவித்துள்ளார்.

மாகாண நிர்வாகங்களுக்குட்பட்ட ஒன்பது வைத்தியசாலைகளை பறித்தெடுக்க அரசு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண நிர்வாகங்களுக்குட்பட்ட ஒன்பது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அமைச்சரவை முடிவு நேற்று எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின்படி, வடமாகாணத்திலிருந்து நான்கு வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சினால் பொறுப்பேற்கப்படவுள்ளது.

மாகாணங்களின் அதிகாரங்களை சிறிது சிறிதாக பறித்தெடுக்கும் அரசின் இரகசிய நோக்கத்தை இந்த நடவடிக்கை தெளிவாக வெளிக்காட்டுகிறது.

முக்கியமாக வடக்கு கிழக்கிலுள்ள நிறுவனங்களை கையகப்படுத்தி இந்த மாகாண சபைகளை அதிகாரமற்ற அமைப்புக்களாக மாற்றுவதுடன் மாகாண சபைகளையும் செயலிழக்கச் செய்யும் நோக்கமிருக்கிறது.

இதேபோல தேசிய பாடசாலைகளை உருவாக்கி மாகாண கல்வியமைச்சை செயலிழக்கச் செய்து, கையகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.

அரசின் இந்த நடவடிக்கை அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்குவதுடன், இனப்பிரச்சினை தீர்விற்கு தாம் தயாரில்லையென்ற செய்தியையே வெளிப்படுத்துகிறது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04