கைப்பற்றப்பட்ட 220 கிலோ ஹெரோயின் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

Published By: Digital Desk 2

15 Jun, 2021 | 04:13 PM
image

எம்.மனோசித்ரா

வெலிகம பிரதேசத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட 220 கிலோ கிராம் ஹெரோயினுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு , இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் டுபாயிலுள்ள ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், 

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெலிகம பகுதியில் சுமார் 220 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்கள் குறித்த போதைப்பொருள் தொகையுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதனுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கோட்டேகொட மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தலுக்காக நிதியுதவி வழங்கியவர் என்று தெரியவந்துள்ளது. இவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். டுபாயிலுள்ள நபரொருவர் இவ்வாறான செயற்பாடுகளை நிர்வகிப்பதாக சந்தேகிக்கப்பட்டது. அதற்கமைய திங்களன்று ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக என்பவர் இதனுடன் தொடர்புபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10