முகக்கவசம் அணியாத பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிப்பு

Published By: J.G.Stephan

15 Jun, 2021 | 01:28 PM
image

கொரோனா தொற்றால் மிகவும் உச்சப் பாதிப்படைந்த  நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு இதுவரை 1 கோடியே 74 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 இலட்சத்து 87 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் அலட்சியப் போக்கே இந்த சுகாதார நெருக்கடிக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரசின் சிக்கல் தன்மையை உணராது, சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிட்டுப் பேசி வரும் போல்சனாரோ, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமுல்படுத்துவது, மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை அவசியமற்றவை என்று கூறி வருகிறார். இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான  ஆதரவாளர்களுடன்  மாஸ்க்  அணியாமல்  வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இதையடுத்து, சா பவுலா மாகாணத்தின் நிர்வாகம், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல் அதிகளவில் ஆட்களைத் திரட்டி பேரணியில் ஈடுபட்டதாகக் கூறி ஜனாதிபதி போல்சனாரோவுக்கு 100 அமெரிக்க டாலர் ‌அபராதம் விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21