போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

Published By: J.G.Stephan

15 Jun, 2021 | 11:10 AM
image

(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியில்  தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை 21 ஆம் திகதி நீக்குவதா இல்லையா என்பது குறித்து 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொவிட் நிலைமை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொவிட் பரவல் காரணமாக முழு உலகமும் ஸ்திரமான தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையிலேயே உள்ளன. இலங்கையிலும் அதே நிலைமையே ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் நாம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடிய சூழல் நாட்டில் ஏற்பட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றோம்.

எனினும், இவ்விடயம் தொடர்பில்  உடனுக்குடன்  தீர்மானிக்க முடியாது.  அதற்கமைய நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் நிலைமை தொடர்பில் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் ஆராய்ந்து போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் .

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சற்று முன்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இணையவழியூடாக நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59