ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியோர் மீண்டும் ஐ.தே.க.வில் இணைந்தனர்: பாலித ரங்கே பண்டார

Published By: J.G.Stephan

15 Jun, 2021 | 10:26 AM
image

(நா.தனுஜா)
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் 16 பேர் நேற்று திங்கட்கிழமை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்துகொண்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

கம்பளை நகரசபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 10 பேர், கண்டி மாநகரசபையைப் பிரிதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் மூவர் மற்றும் மேல்மாகாண மாநகரசபை உறுப்பினர்கள் மூவரே இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்துகொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கம்பளை நகரசபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அனைவருமே இப்போது  ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்திருப்பதாகக்  கூறிய பாலித ரங்கே பண்டார, இவ்வாறு இணைந்து கொண்ட  உறுப்பினர்கள்  பிரத்யேகமாக  ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்து இது குறித்த விபரங்களைப் பகிர்ந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கான கோரிக்கையை முன்வைத்திருப்பதாகவும், இது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாகவும் பாலித ரங்கே பண்டார மேலும் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19